if> Jaffna PC - தொழில்நுட்ப செய்திகள், மருத்துவ குறிப்புகள், மென்பொருள் பதிவிறக்கங்கள், கணினி பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் கல்வி | தமிழ் அழகான வீடு கட்ட உதவும் 3D software | Jaffna PC - Technology News & Medical Tips in Tamil

அழகான வீடு கட்ட உதவும் 3D software


வீட்டைக் கட்டிப்பார், கல்யாணத்தைப் பண்ணிப்பார் என்று சும்மாவா சொன்னார்கள்  அது அவ்வளவு எளிதானது இல்லை என்பது நமக்கு தெரியும் இதற்குத்தான் இப்போது ஒரு மென்பொருள்  உதவுகிறது அது பற்றி பாப்போம்


நீங்க புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணிகொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங்களுக்கு இந்த மென்பொருள் மிக உபயோகமாக இருக்கும். இது இலவசமாக கிடைக்கும் இண்ட்டீரியர் சாப்ட்வேர். மிக எளிதில் மனதில் தோன்றுவதை வரைபடமாக வரைய உதவும் அதே நேரத்தில் கட்டிடத்தின் முப்பரிமாண  தோற்றத்தையும் நமக்கு தரும். மேலும் கதவு ஜன்னல், போன்றவற்றை பில்ட் இன்னாகவே வைத்திருப்பதும் இந்த மென்பொருளின் சிறப்பாக சொல்லலாம். கட்டில் சேர் போன்ற இண்டீரியர் பொருட்களின் ஸ்டேண்டர்ட் அளவுகளின் பில்ட் இன்னாக கொடுத்திருப்பதால் நம் தேவைக்கேற்ப பொருத்தி பார்த்து அறையின் அளவுகளை மாற்றி கொள்ளவும் மிக எளிதாக இருக்கிறது.

எடிட் ஆப்ஷனை தேர்வுசெய்து நமக்கு தேவையான அளவுகளை மற்றூம் கலர்களை மாற்றி பார்த்து கொள்ளலாம். புதிதாக வீடு கட்ட போகிறவர்கள் மற்றும் வீடு கட்டி கொண்டிருப்பவர்களுக்கு மிகவும் உபயோகமான மென்பொருள். குறிப்பாக இண்ட்டீரியர் டிஸைனுக்கு இது மிகவும் உபயோகமான மென்பொருள். இது முற்றிலும் இலவசமாகவே கிடைக்கிறது

தரவிறக்க சுட்டி    

Services