if> Jaffna PC - தொழில்நுட்ப செய்திகள், மருத்துவ குறிப்புகள், மென்பொருள் பதிவிறக்கங்கள், கணினி பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் கல்வி | தமிழ் சளி தொல்லை நீங்க பாட்டி வைத்தியம் #HealthTips | Jaffna PC - Technology News & Medical Tips in Tamil

சளி தொல்லை நீங்க பாட்டி வைத்தியம் #HealthTips


 குளிர்காலம் ஆனால் பலருக்கும் சளி தொல்லை கொடுக்கும் , தடிமன் குறைய வீட்டிலேயே செய்யக்கூடிய பாட்டி வைத்தியம்  பனிக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், குழந்தைகள் மற்றும்

வயதானவர்களைத் தொற்றுநோய்கள் எளிதில் தாக்கும். ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்னை உள்ளவர்களுக்கு, 'பனிக்காலம்’ என்பதே படு அவஸ்தையான காலம்.

"உடல்நலனில் தனிக் கவனமும் முன்னெச்சரிக்கையும் இருந்தால், இந்தப் பனிக்காலத்தில் நோயை நெருங்கவிடாமல் கடந்துவிடலாம். உடலைக் கதகதப்பாக வைத்துக்கொள்வதும், உடலுக்கு உஷ்ணம் தரும் உணவுகளை உட்கொள்வதும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பதும் குளிர்காலத்தில் தாக்கக் கூடிய நோய்களிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள உதவும்

`பனிக்காற்றால்  சளி, மூக்கடைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும். குளிர்க் காற்றில் நடைபயிற்சி செய்வதைத் தவிர்க்கலாம். இந்தப் பிரச்னைகளை எதிர்கொள்ள இந்த சீசனுக்கு உகந்த சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டும். துளசி டீ, இஞ்சி டீ, புதினா டீ, சுக்கு மல்லி டீ போன்றவற்றைப் பருகலாம். மிளகு, இஞ்சி, பூண்டு, சீரகம், வைட்டமின் சி சத்துள்ள சாத்துக்குடி, ஆரஞ்சு, நெல்லி, எலுமிச்சை ஆகியவற்றை சாப்பாட்டு மெனுவில் சேர்த்துக்கொள்ளலாம்.  குளிர் காலத்தில் தூசி போன்றவற்றின் மூலமாக ஒவ்வாமை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டியதும் முக்கியம். மூக்கில் நீர்வடிதலுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ‘ஸ்பிரே நாஸில்ஸ்’  (Spray Nozzles)உபயோகிக்கலாம்.


பனிக்காலத்தில் ஏற்படும் சளிப் பிரச்னையை அலட்சியப்படுத்தினால், அது சைனசஸாக உருவெடுக்க வாய்ப்பு உண்டு. மூக்கு அடைபட்டு, மூக்கின் அருகில் உள்ள காற்று அறைகளில் நீர் தேங்குவதால் சைனஸ் பிரச்னை ஏற்படும். இதனால் கண்களைச் சுற்றி வலி, கன்ன எலும்புகளில் வலி, தலைவலி ஆகியவை ஏற்படும். இயல்பாக சுவாசிக்க முடியாது; தலை பாரமாக இருக்கும்; குனியும்போதும் நிமிரும்போதும் தலை வலிக்கும். மூக்கு  அடிக்கடி  அடைத்துக்கொள்வதால் வாசனையை நுகர முடியாது. இதன் ஆரம்ப நிலை என்றால், மருத்து, மாத்திரைகள் மூலம் குணப்படுத்திவிடலாம். முற்றிய நிலையில் அறுவைசிகிச்சை வரை செய்யவேண்டியிருக்கும்.

தொற்றுநோய்களின் மூலம் காது வலி, காதில் சீழ் வடிதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இந்த நிலையில் காது சுத்தமாக அடைத்துக்கொள்ளும். இரவு நேரத்தில் காதில் தீவிர வலி ஏற்படும். சில சமயம் நடுக்காதில் திரவத் தேக்கம் ஏற்பட்டு, பாக்டீரியா அதிகமாகப் பெருகும் வாய்ப்பும் உண்டு. பனிக்காலத்தில் வயதானவர்கள் அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொள்வதைத் தவிர்க்கலாம் அல்லது குளிர் தாக்காத வகையில் மஃப்ளர், ஸ்வெட்டர் அணிந்துகொண்டு நடக்கலாம்.

அல்லது

இஞ்சி

10ml இஞ்சி சாறு, 10ml ஆடாதொடை இல்லை சாறு மற்றும் 10ml தேன் ஆகியவற்றை கலந்து தினமும் மூன்று முறை காலை, பிற்பகல், மாலை என குடிக்க வேண்டும்

அல்லது

திரிகடுகம் கசாயம்

30 கிராம் மிளகு, 50 கிராம் திப்பிளி, 50 கிராம் பானக்கற்கண்டு, 50 கிராம் கடுக்காய் தோல் ஆகியவற்றை போடி செய்து தினமும் மூன்று வேலை சாப்பிடவும். அவ்வாறு சாப்பிட்டு வர சளி குணமாகும். பெரியவர்கள் 1 ஸ்பூன் சாப்பிடலாம் குழந்தைகளுக்கு 1/2 ஸ்பூன் தான் கொடுக்க வேண்டும்.

அல்லது


எலுமிச்சை

 ஒரு எலுமிச்சை பழம் எடுத்து வெதுவெதுப்பான தண்ணீரில் பிழிந்து சிறு துளி தேன் சேர்த்து கலக்கி தினமும் இருவேளை சாப்பிடவும். எலுமிச்சை பழத்தில் வைட்டமின் C இருப்பதால் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அல்லது


தேங்காய் எண்ணெய்

ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதை கொதிக்க விடவும் பிறகு அதில் கற்பூரம் சேர்க்கவும். அது வெதுவெதுப்பாக வரும் வரை ஆறவிடவும். பின்பு அந்த எண்ணெயை உங்கள் உடம்பில் தேய்க்கவும் (மார்பு / மூக்கு / நெற்றியில் / மற்றும் பின்புறம்). அதை ஒரு நாளைக்கு 5 முதல் 7 முறை பயன்படுத்துங்கள்; அவ்வாறு செய்துவர நீங்கள் ஒரு நல்ல நிவாரணத்தைக் காணலாம். இது விக்ஸ், அமிர்தாஞ்சன் போன்ற வாபரோப் பதிலாக இயற்கையான ஒன்று

அல்லது 

துளசி

தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் சிறுதளவு துளசி மற்றும் சிறிது கற்பூரவள்ளி சேர்க்கவும். 2 கப் தண்ணீர் அரை 1/2 கப் தண்ணீராக வரும்வரை கொதிக்கவிடவும். பிறகு அதை குடிக்கவும். இது இருமல் மூலம் உங்கள் சளியை வெளியே கொண்டு வரும்.

அல்லது
 
ஆடாதொடை

 ஆடாதொடை இலை, மிளகு, துளசி, தூதுவளை ஆகியவற்றை சமமான விகிதத்தில் எடுத்துக்கொள்ளவும். இதை வைத்து டிகாஷன் போல ரெடி செய்து தினமும் காலை, மாலை என இரண்டு முறை பருகி வர சளி/ இருமல் / வாந்தி மற்றும் மூச்சு திணறல் சரியாகும்.                                                                               

அல்லது
 
கடுக்காய்

 மிளகு, கடுக்காய், அதிமதுரம் ஆகியவற்றை சமமான விகிதத்தில் எடுத்து அதை வறுத்து பொடி செய்து கொள்ளவும். இதை தினமும் சிறுதுளி எடுத்து தேனில் கலந்து சில நாட்களுக்கு சாப்பிடவும். இது கடுமையான இருமலையும் குறைக்கும்

அல்லது

10 தூதுவளை இலைகளை எடுக்கவும். இதனுடன், சிறிது முசுமுசுக்கை இலை, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சளி, இருமல் இல்-லாமல் போகும். சளி பிரச்சினைக்கு தூதுவளை மருந்தாகிறது. இது, உஷ்ணத்தை கொடுக்க கூடியது. உடலுக்கு பலத்தை தருகிறது. முசுமுசுக்கை சளியை போக்குகிறது. ஆயுளை அதிகரிக்கும் தன்மை கொண்டது. தூதுவளை, முசுமுசுக்கை பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வெள்ளெருக்கம் பூவை பயன்படுத்தி ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்து தயாரிக்கலாம். வெள்ளெருக்கம் பூவின் இதழ்களை நீர்விடாமல் பசையாக அரைத்து எடுக்கவும். இதனுடன் மிளகுப்பொடி சேர்க்கவும். 4 பங்கு பூவுக்கு ஒரு பங்கு மிளகு என்ற அளவில் எடுக்கவும். இதை நன்றாக கலந்து சுண்டைக்காய் அளவில் உருண்டைகளாக பிடிக்கவும். இது காய்ந்தவுடன் மிளகு அளவுக்கு கிடைக்கும். அன்றாடம் இருவேளை மிளகு அளவுக்கு சாப்பிடும்போது ஆஸ்மா சரியாகும். ஆஸ்துமாவுக்கு மிகவும் பாதுகாப்பான மருந்தாக வெள்ளெருக்கம் பூ விளங்குகி-றது. ஒரு வெள்ளெருக்கம் பூவுடன் 5 மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டால் ஆஸ்துமா பிரச்சினை தீரும். கடுகை பயன்படுத்தி வறட்டு இருமலுக்கான தேநீர் தயாரிக்கலாம். கால் ஸ்பூன் கடுகு எடுத்து லேசாக வறுக்கவும். இதை இடித்து எடுக்கவும். இந்த பொடியில் ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். வடிகட்டி தேன் சேர்த்து குடிப்பதால் சளி, காய்ச்சல், இருமல், உடல் வலி, கண்களில் நீர் வழிதல் போன்ற பிரச்சினைகள் இல்லாமல் போகும். இந்த தேநீரை 50 முதல் 100 மில்லி வரை குடிக்கலாம்.

அல்லது

நெஞ்சு சளி நீங்க எலுமிச்சை சாறு, தேன் மருந்து :

 சிறிது எலுமிச்சை சாரை சுடு நீரில் விட்டு நன்கு கலக்கி பின் தேன் சிறிது சேர்த்து கலக்கி குடித்தால் நெஞ்சு சளி கரையும். தினமும் காபி, டீ க்கு மாற்றாக இந்த பானம் குடிக்க பழகி கொண்டால் நெஞ்சு சளியே இருந்த இடம் தெரியாமல் போகும். நெஞ்சு சளி கரைய மிளகு பால் : மருந்துகுடிக்க முடிந்த காரத்திற்கு ஏற்றவாறு மிளகுத் தூளை பாலுடன் கலந்து ஒரு வாரம் குடித்து வர நெஞ்சு சளி கரையும்.நெஞ்சு சளி நீங்க புதினா, மிளகு மருந்து : புதினா இலை (ஒரு கைப்பிடி) மிளகு(3) இரண்டையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல், நுரையீரல் கோளாறுகள் நீங்கும்.நெஞ்சு சளி குணமாக வெற்றிலை, இஞ்சி மருந்து : வெற்றிலைச் சாறு, இஞ்சிச் சாறு இரண்டையும் ஒன்றாகக் கலந்து குடித்தால் மார்பு சளி, சுவாசக் கோளாறுகள் குணமாகும். நெஞ்சு சளி கரைய தேங்காய் எண்ணெய், கற்பூரம் மருந்து : ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிது தேங்காய் எண்ணெய் எடுத்து அதில் கற்பூரம் சேர்த்து நன்கு சுட வைக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக கற்பூரம் கரைய ஆரம்பிக்கும். கற்பூரம் நன்கு கரைந்ததும் பாத்திரத்தை இறக்கி விடலாம். சூடான எண்ணையை கையில் பட்டு விடாதவாறு பாதுகாப்பான இடத்தில் ஆர வைக்க வேண்டும். வீட்டில் குழந்தைகள் இருந்தால் மிக கவனம். சூடான எண்ணெய் கையில் பட்டால் ஆறுவதும் கடினம், தழும்பும் விரைவில் மறையாது. தேங்காய் எண்ணெய் நன்கு ஆறியதும் அந்த எண்ணையை நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும். சிறிது குணம் தெரிந்தவுடன் விட்டு விட கூடாது. தொடர்ந்து தடவி வந்தால் நாள் பட்ட நெஞ்சு சளியையும் குணபடுத்தி விடலாம். 

அல்லது

கடுகை அரைத்துப் பாதங்களில் பூச, ஜலதோஷம் குணமாகும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக்க, ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெயுடன் கற்பூரத்தையும் போட்டு கிண்ணத்தைச் சூடேற்றி எண்ணெயை மார்மீதும், முதுகுபுறமும் தடவ சளி, இருமல் குறையும்.
மூக்கில் சளி ஒழுகாமல் இருக்க: மூக்கில் இடைவிடாது சளி ஒழுகிக் கொண்டே இருக்கும் நபர்கள் வெற்றிலைச் சாறு இரண்டு சொட்டு மூக்கில் விட சளி ஒழுகுதல் நிற்கும்.
குழந்தைகளுக்கு சளி பிடித்து விட்டால், முருங்கைக் கீரையும், உப்பையும் கசக்கி 3 ஸ்பூன் அளவு கொடுத்தால் வாந்தியாக வெளியே வந்துவிடும்.

அல்லது


துளசி இலை _ 10 2. ஓமம் _ ½ ஸ்பூன் 3. பூண்டு _ 1 பல் 4. மிளகு _ 4  துளசி இலையை நன்கு நீரில் அலசி விட்டு மற்ற பொருட்களுடன் ஒன்றாக சேர்த்து இடித்து (15 மிலி தண்ணீரையும் சேர்த்து ) நைசாக ஆனதும் சாறு பிழிந்து வடிக்கட்டி சிறிது தேனை அதனுடன் நன்கு கலந்துவிட்டு குழந்தைகளுக்கு காலையில் வெறும் வயிற்றில் கொடுக்க வேண்டும்.குழந்தைகள் கத்துவார்கள்.இருப்பினும் தண்ணீரோ,பாலோ ஒரு அரைமணிநேரத்திற்க்கு கொடுக்காமல் இருக்க வேண்டும்.சில குழந்தைகள் அழுவதிலேயே வாந்தி போல் சளியெல்லாம் கக்கி விடுவார்கள்.தோண்டையில் சிக்கியிருக்கும் சளியெல்லாம் வெளியே வந்து நல்ல ரிலீஃபாக இருக்கும்.அல்லது மோஷனில் சளி வெளியாகும். இது நான்கு மாத குழந்தைகளிலிருந்தே கொடுக்கலாம்.பயப்படவேண்டாம்……தொடர்ந்து மூன்று நாட்கள் மட்டுமே கொடுத்தால் போதும்.அதன் பிறகு நிச்சயம் சரியாகியிருக்கும். இது என் மூன்று குழந்தைகளுக்கும் நான் கொடுத்துவந்த மருந்து.நல்ல பலனளிக்கும்.இப்போது நான் ஊருக்கு போனாலும் என் கொலுந்தரின் பைய்யனுக்கும் நான் தான் இந்த மருந்தை கொடுப்பேன்.எனது இல்லத்தின் கை கண்ட மருந்து இதுதான். எனவே தான் இதை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன். பெரியவர்களுக்கும் இது உகந்ததே. வெறுமெனவே துளசி இலையை காலையில் மென்று சாப்பிடலாம்.
குழந்தைகளுக்கு சளி பிடித்து விட்டால், குப்பைமேனி இலையையும், உப்பையும் கசக்கி 5 ஸ்பூன் அளவு வெறும் வயிற்றில் கொடுத்தால் வாந்தியாக வெளியே வந்துவிடும்

அல்லது

சாதாரண சளி காய்ச்சல் கணை இது மூன்றுக்கும் கை கண்ட மருந்து வேப்ப என்ணைய்தான் வேப்ப எண்ணையுடன் ஒன்ரிரண்டு வெள்ளைபூண்டும் சிரிது மிளகும் தட்டிப்போட்டு லேசாக சுட வைத்து வயிற்றைத்தவிர  உச்சந்தலையிலிருந்து // //உள்ளங்கால் வரை தடவி விடவும் காச்சல் அரை மணி நேரத்தில் மாறிவிடும் சளி மலத்துடன் வெளியேரும் எண்ணைய்தேய்த்தவுடன் சிரிது நேரத்தில் நன்கு வேர்க்கும் பிறகு காச்சல் விடும் மூன்று நாள் வரை தடவலாம் காலை மாலை தேய்க்கவும் சாதாரண சளீகாய்ச்சல் சரியாகிவிடும் நாங்கள் டாக்டரிடம் போனதில்லை அத்ற்கும் பிறகு காய்ச்சல் இருந்தால் அது மற்றகாரணத்தினால் ஏற்பட்டிருக்கும் டாக்டரிடம் காட்டலாம் சாதாரண சளீகாய்ச்சலுக்கு வேப்ப எண்ணையே போதுமானது சளியும் மோஷன் போகும் போது வெளியேறிவிடும் பயமே இல்லை வெளியேதான் தடவப்போறோம் உள்ளுக்கு கொடுக்கலை அதனால் பயம் வேண்டாம்
உடம்புக்கும் உறுதி கணை இழுப்பு வீசிங்குக்கு நல்ல மருத்துவம் அந்தகாலத்தின் பாட்டி வைத்தியம் இன்றும் கிராமத்தில் கடை பிடிக்கும் பழக்கம் சிறியவர் முதல் பெரியவர் வரை தாராளமாக தடவலாம் என்ன நாற்றத்தைச்சகிச்சுக்கனும் செலவில்லாத சைட் எபெக்ட் இல்லாத கை வைத்தியம் நோயும் தீரும்

அல்லது

உப்புநீரில் வாயைக் கொப்பளித்தல் தொண்டைவலி வந்துவிட்டால், உடனே வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையான வழிமுறை. தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தைக் குறைக்கும்; தொண்டை உறுத்தலை நீக்கும்; சளியையும் குறைக்கும்.கருமிளகு டீ கருமிளகு இருமல், சளிக்கு மிக நல்ல மருந்து. கருமிளகு டீ குடிப்பது தொண்டைவலியைக் குறைக்கும். ஒரு கப் வெந்நீரில் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன், சிறிதளவு கருமிளகு சேர்த்துக்கொள்ளவும். இதை அப்படியே மூடிவைக்கவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு இதைக் குடிக்கலாம். வெங்காய சிரப் ஒரு வெங்காயத்தை உரித்து நன்றாக நசுக்கிக்கொள்ளவும். அதனுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும். இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்துக்கொள்ளவும். சூடு ஆறிய பிறகு இதனைக் குடிக்கலாம். வெங்காயம் சளி, இருமலுக்கு மிக நல்ல மருந்து. வெங்காயத்தில் உள்ள ஃபிளேவனாய்ட்ஸ் நிறமி, சளி மற்றும் இருமலை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளுக்கு எதிராகச் செயல்படும் தன்மைகொண்டது. பூண்டு நான்கு அல்லது ஐந்து பூண்டுப் பற்களை எடுத்துக்கொள்ளவும். அத்துடன் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றிச் சேர்த்து பூண்டைப் பொரித்து எடுக்கவும். சூடு ஆறுவதற்குள் இதைச் சாப்பிட்டுவிட வேண்டும்.
இஞ்சி இஞ்சி, வறண்ட இருமலை எளிதில் நீக்கக்கூடியது. ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்து, அதில் சிறிது உப்பைத் தூவவும். உப்பு கலந்த இஞ்சியை சில நிமிடங்களுக்கு நன்கு மெல்லவும். இஞ்சியோடு துளசி இலையையும் சேர்த்துக்கொண்டால், சளி, இருமலுக்கு நல்ல பலன் கிடைக்கும். சளி, இருமல் வந்துவிட்டால் தண்ணீரை சூடாக்கித்தான் குடிக்க வேண்டும். வெந்நீருக்கு தொண்டையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உண்டு. இது சளி, காய்ச்சலுக்குக் காரணமான தொற்றுகளை நீக்கவும் உதவும். எனவே, சளி வந்தால் வெந்நீர் அருந்தவேண்டியது கட்டாயம். அதோடு மேலே சொன்ன வழிமுறைகளில் ஒன்றையும் பின்பற்றினால் சளியும் இருமலும் வந்த இடம் தெரியாமல் ஓடிப்போவது உறுதி

அல்லது


கற்பூரவள்ளி - மருத்துவ பயன்கள் கற்பூரவள்ளி ( ஓம செடி ) பெரும்பாலும் விட்டிலேயே பூ தொட்டியில் வளர்க்கலாம் .இது மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி இப்போது உள்ள காலகட்டத்தில் நாம் இவ்வகையான மருத்துவ குணம் கொண்ட அறிய செடிகளை எல்லாம் மறந்து கொண்டு வருகிறோம் .நோயற்ற செல்வமே குறையற்ற செல்வம் என்று சொல்லுவார்கள் .அதை போல நாம் இவ்வகையான செடிகளை வளர்ப்பதன் மூலம் சில வகையான நோய்களை தடுக்கலாம் கற்பூரவள்ளி (Coleus aromaticus) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது, புதராக வளருகிறது. வாசனை மிக்க இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும். கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது. வேறுபெயர்கள் - ஓமவல்லி, ஒதப்பன்னா, பாசானபேதி, கண்டிரி போரேஜ். கற்பூரவல்லியை நம் வீட்டில் வளர்க்க 8 மாதங்கள் ஆகும். 8 மாதத்தில் இதன் இலைகள் பயன் தொடங்கும். இதன் தண்டும், இலைகளும் பயன்தரக்கூடியவை.

அல்லது

ஒரு நான்கு அங்குலம் அளவுள்ள இஞ்சியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை நன்றாகக் கழுவவேண்டும். பின்பு தோலுரித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் நான்கு கப் தண்ணீர் ஊற்ற வேண்டும். பின்பு அதில் நாம் வைத்திருந்த இஞ்சி துண்டு. இரண்டு இலவங்கப்பட்டை துண்டுகள் மற்றும் இரண்டு நட்சத்திர சோம்பு இவை மூன்றையும் போட்டு ஒரு பத்து நிமிடம் நன்றாகக் கொதிக்கும் வரை சூடு செய்ய வேண்டும்.
பின்பு அதை இறக்கி ஒரு கப்பில் தேவையான அளவு ஊற்றி நன்றாகக் கலக்கி விட வேண்டும். பின்பு 2 மேசைக்கரண்டி தேன் எடுத்து அதில் ஊற்றி நன்றாகக் கலக்கிக் கொள்ள வேண்டும். இறுதியாக அதில் ஒரு பாதி நறுக்கிய எலுமிச்சம்பழத்தை பிழிய வேண்டும். ஜலதோஷத்தைப் போக்கக் கூடிய அற்புதமான நிவாரணி பத்து நிமிடத்தில் தயார்.

அல்லது

1 வெற்றிலை, 10 துளசி இலைகள், 5 மிளகு போடி செய்தது, 2 கற்பூரவல்லி இலைகள், இவை அனைத்தையும் பண்படுத்தி மிகவும் எளிமையான முறையில் நாம் வீட்டிலேயே செய்யும் ஒரு கஷாயம் தான் இது. காணொளியை முழுமையாக பார்த்து பயனடையுங்கள்

குழந்தைகளின் சளி, இருமலை போக்க உதவும் வீட்டு வைத்தியங்கள் :

1. கற்பூரம் / சூடம்
தேங்காய் எண்ணெயை சிறிது சூடாக்கி அதில் தூள் செய்த கற்பூரத்தை போடுங்கள். இது நன்றாக ஆறிய பிறகு அதில் இருந்து 4 முதல் 5 சொட்டுகள் எண்ணெயை உள்ளங்கையில் தேய்த்து குழந்தையின் மார்பு பகுதியில் நன்றாக தடவி விடுங்கள். மிகவும் குறைவான அளவு கற்பூரத்தை பயன்படுத்துங்கள். ஏனெனில் அதிகளவு கற்பூரத்தை பயன்படுத்தும் போது அது குழந்தையின் சருமத்தை பாதிக்க கூடும்.

2. யூகலிப்டஸ் ஆயில்
குழந்தையை யூகலிப்டஸ் ஆயிலை சுவாசிக்க வையுங்கள். மேலும் குழந்தை படுக்கும் இடத்தை சுற்றி யூகலிப்டஸ் ஆயிலை சிறிது தெளிக்கலாம்…

3. மஞ்சள்
விரலி மஞ்சளை எடுத்துக் கொண்டு அதை மெழுகுவர்த்தி அல்லது விளக்கு எரியும் நெருப்பில் சுட்டுக் கொள்ளுங்கள். அந்த புகையை ஒரு நிமிடம் குழந்தை சுவாசிக்கும் படி செய்யுங்கள். மஞ்சள் எரிந்த பிறகு அது நூல் போல தான் வரும் என்பதால் புகையை சுவாசிக்க வைக்க பயப்பட வேண்டாம்…

1 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு குடிக்கும் பாலுடன் இம்மியளவு  டர்மெரிக் மில்க் மசாலாவை கலந்து கொடுக்கலாம்.டர்மெரிக் மில்க் மசாலாவில் கலந்துள்ள மஞ்சள் மற்றும் சளியை நீக்கும் ஆர்கானிக் மசாலா பொருட்கள் சளி தொல்லையில் இருந்து விரைவில் குணமடைய வழி செய்கிறது

4. சாய்வான முறையில் தூங்க வைத்தல்
சளி தொந்தரவால் உங்கள் குழந்தை தூங்க சிரமப்படுகிறதா? தலையணையை குழந்தையின் முதுகுப்புறம் வைத்து சற்று சாய்வான முறையில் குழந்தையை தூங்க வையுங்கள். இதனால் மூக்கில் இருந்து சளி தொந்தரவு வராமல் குழந்தை நிம்மதியாக தூங்கும்.

5. பூண்டு
2 பல் பூண்டை எடுத்து உரித்துக்கொண்டு அதை 50 மில்லி தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் வரை வேக விடவும். ஆறிய பிறகு இந்த தண்ணீரை எடுத்து 2 முதல் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை குழந்தைக்கு தரவும். 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதனை தர வேண்டும்.

6. இஞ்சி
சளியை வெளியேற்றும் தன்மை இஞ்சிக்கு உள்ளது மேலும் மூக்கடைப்புக்கும் இஞ்சி சிறந்த தீர்வளிக்கும். இஞ்சியை பொடியாக துருவிக் கொண்டு அதனை வெந்நீரில் போட்டு வைத்து 10 நிமிடங்களுக்கு பிறகு அந்த தண்ணீரை குழந்தைக்கு தரலாம். 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதனை தர வேண்டும்.

7. சிக்கன் சூப்
சளித் தொந்தரவை போக்க சிக்கன் சூப்பை 8 மாதங்களிலிருந்து குழந்தைக்கு தரலாம்.

8. துளசி இலைகள்
துளசி இலையில் சிறந்த மருத்துவ தன்மை உள்ளதால் இதனை தண்ணீர் அல்லது பாலுடன் சேர்த்து தரலாம். தண்ணீரில் இதனை ஒரு மணி நேரம் ஊறவைத்து பின் அந்த தண்ணீரை குழந்தைக்கு கொடுக்கலாம். இதனை 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு தர வேண்டும்.

9. தேன்
ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு அரை டீஸ்பூன் தேனை எடுத்து அதை பாலில் கலந்து நாளொன்றுக்கு இரு முறை தரலாம்…

10. ஓமம்
ஓமத்தை ஒரு கடாயில் போட்டு மிதமான தீயில் வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனை ஒரு துணியில் கொட்டி மூட்டை போல கட்டிக் கொள்ளுங்கள். இதனை குழந்தையின் மூக்கருகே கொண்டு சென்று சுவாசிக்க வையுங்கள். அல்லது குழந்தையின் மூக்கருகே இதனை வைத்து விடலாம்…

11.சலைன் டிராப்ஸ்
குழந்தையின் மூக்கடைப்பை போக்கும் தன்மை சலைன் டிராப்ஸ்க்கு உண்டு. 2 முதல் 3 சொட்டுகளை மூக்கின் துவாரங்களில் விட்டு குழந்தையை சாய்ந்து இருக்கும் படி செய்யுங்கள். இது விரைவான நிவாரணம் அளிக்கும் ஒரு மருந்து.

12. வெண்டைக்காய்
வெண்டைக்காயில் உள்ள வழவழப்புத் தன்மை குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். இது குழந்தையின் உடலில் உள்ள சளி மற்றும் இருமல் மற்றும் தொண்டை பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். வெண்டைக்காயை சிறு சிறு துண்டுகளாக்கி அதை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் வைத்திருக்கவும். ஆறிய பிறகு இந்த தண்ணீரை எடுத்து குழந்தைக்கு குடிக்க தரலாம். ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைக்கு இதனை தர வேண்டும்…

13. செவ்வந்திப்பூ / கெமோமில்
செவ்வந்திப்பூ சிறிது கலந்த டீயை 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு தரலாம். தொண்டை பிரச்சினைக்கு தீர்வளிக்கும் தன்மை இதில் உள்ளது.

14. எலுமிச்சம்பழம்
எலுமிச்சம்பழத்தில் வைட்டமின் சி இருப்பதால் அது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு லெமன் ஜூஸ் உடன் தேன் மற்றும் தண்ணீர் கலந்து தரலாம்…

15.பட்டை
பட்டையில் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் இருப்பதால் இது உடலில் ஏற்படும் தொற்று நோய் மற்றும் பாக்டீரியா தொற்றுக்கு தீர்வளிக்கும். ஆனால் இதனை ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கே தர வேண்டும். பட்டை தூள் கால் ஸ்பூன் எடுத்துக் கொண்டு அதனை ஒரு டேபிள்ஸ்பூன் தேனுடன் கலந்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை தரவும். குழந்தைக்கு சளி இருமல் தொந்தரவு இருப்பதாக தோன்றிய ஆரம்ப கட்டத்திலேயே இதனை தருவதன் மூலம் நிவாரணம் கிடைக்கும்.

16. கடுகு எண்ணெய்
5 முதல் 10 டீஸ்பூன் கடுகு எண்ணெயில் நசுக்கிய பூண்டு மற்றும் ஓமத்தை தாளிக்கவும். ஆறிய பிறகு இந்த கலவையை எடுத்து பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் போது இதனை எடுத்து குழந்தையின் மார்பு பகுதி, நெற்றி மற்றும் தொண்டையில் தடவுங்கள்.

17.குழந்தைகளுக்கான விக்ஸ்
குழந்தைகளுக்கான விக்ஸ் வாங்கிவைத்துக் கொள்ளுங்கள். சளி தொந்தரவு ஏற்படும் போது குழந்தையின் பாதங்களில் இதனை தடவி சாக்ஸ் போட்டு விடுங்கள். மேலும் இதனை குழந்தையின் மார்பு மற்றும் தொண்டை பகுதியில் தடவலாம். குழந்தைக்கு சிறந்த தீர்வளிக்கும் முறை இது.

18. ஈரப்பதமூட்டி
பொதுவாக குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமல் தொல்லை ஏற்படும் போது காற்றை உள்ளிழுப்பதில் சிரமம் ஏற்படும். அப்போது மிதமான ஈரப்பதமூட்டியை அறையில் வைத்து அதை குழந்தையை சுவாசிக்க செய்யலாம்.

19. ஆவி பிடித்தல்
ஆவி பிடிக்கும் போது குழந்தைகளை தனியாக விடாதீர்கள். பக்கெட் அல்லது பாத் டப்பில் வெந்நீரை எடுத்துக் கொண்டு குழந்தைகளின் கைகளை பிடித்துக் கொண்டு மூச்சை உள்ளிழுக்க வைக்கவும். சூடான காற்று உள்ளே செல்லும் போது குழந்தையின் உடலில் இருக்கும் கபம் வெளியேறி விடும்.

20. நெய்
2 டேபிள் ஸ்பூன் நெய்யை எடுத்து அதை சூடாக்கி அதில் 2 முதல் 3 மிளகை போட்டு பின் அதனை அரைத்து வறட்டு இருமலால் அவதிப்பட்டு வரும் குழந்தைக்கு கொடுங்கள். ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைக்கு இதனை தரலாம்






Services