அறிவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரியமானவர்களிற்கு தொலைதூரத்தில் இருந்தும் கைகொடுத்து தங்கள்ளது உணர்வினை வெளிப்படுத்த கூடிய கருவியை நெதர்லாந்தின் அம்ஸ்டர்டாம் நகரைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ‘பிரெப்பிள்ஸ்’ என அழைக்கப்படும் தொலை தூரத்திலுள்ளவர்கள் ஒருவருக்கொருவர் தொடுகை உணர்வைப் பெறுவதற்கு வழிவகை செய்யும் தொழில்நுட்ப உபகரணத்தை உருவாக்கியுள்ளனர்.
இண்டர்நெட் மூலம் முத்தமிட கருவி கண்டு பிக்க பட்டது நினைவு வரலாம் பொதுவாக ஒருவருக்கொருவர் நீண்ட தொலைவிலுள்ள காதலர்கள் ஒருவர் முகம் பார்த்து ஒருவர் உரையாடுவதற்கு ‘ஸ்கைப்’ போன்ற இணையத்தள தொடர்பாடல் சேவைகள் உதவுகின்ற போதும் காதலர்கள் ஒருவர் கரத்தை ஒருவர் பற்றி அன்பை வெளிப்படுத்துவது சாத்தியமில்லாது உள்ளது
கம்பியில்லா தொழில்நுட்பத்தின் மூலம் செயற்படும் இந்த உபகரணம் ஒருவர் தனது அன்புக்குரியவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவரது கரத்தைப் பற்றி அன்பை வெளிப்படுத்துவதற்கு வழிவகை செய்கிறது.
தூர இடங்களில் இருக்கும் காதலர்கள் தம்மிடமுள்ள ‘மிரெப்பிள்ஸ்’ உபகரணத்தைப் பயன்படுத்தி கரத்தைப் பற்றும் உணர்வை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொள்ள முடியும்.இந்த உபகரணத்தை ஸ்கைப் மற்றும் கூகுள் ஹேங் அவுட் சேவைகளுடன் இணைத்துப் பயன்படுத்த முடியும்.மேற்படி ஒரு சோடி உபகரணங்களின் ஆகக்குறைந்த விலை 99 அமெரிக்க டொலராகும்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கைபேசி திரையை தொட்டு பயன்படுத்துவோம். அழுத்தும் வேகம், மேலே கீழே நகர்த்துவது என இந்த செயல்கள் ஒவ்வொரு ஆளுக்கும் வேறுபடும்.
இந்த வேறுபாடுகளை வைத்து அந்தக் கைப்பேசியின் உரிமையாளர் யார் என்பதை கண்டறிந்து மற்றவர் தொட்டால் திரையை அணைத்துவிடும் புதிய மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இலியாநஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் Cheng Bo மற்றும் அவரின் நண்பர்கள் Silent Sense எனும் இந்த மென்பொருளை எழுதியுள்ளார்கள்.
இதை நிறுவியது முதல் உங்களின் விரல் அசைவு வேகம், தொடும் அழுத்தம், இழுக்கும் முறை போன்றவற்றை உள்வாங்கி பதிந்துகொள்ளும்.
100 நபர்களிடம் நடத்திய சோதனையில் இந்த மென்பொருள் 98% அளவில் உரிமையாளரை சரியாகக் கண்டுபிடித்துவிட்டது.
பிற மென்பொருள்கள் மற்றும் விளையாட்டுகள் விளையாடும் போது இந்த மென்பொருள் வேலை செய்யாது. ஆனால் முக்கியமாக மின்னஞ்சல், குறுந்தகவல் மற்றும் புகைப்படங்களை பார்க்கும் போது இது செயல்பட்டு பிறர் பயன்படுத்தாத வண்ணம் காக்கும்.

விரைவில் Silent Sense மென்பொருள் அனைவரின் பயன்பாட்டிற்கும் வர இருக்கிறது.
தேடலுக்கான தளம் என்றால் நம் நினைவில் முதலில் நிற்பது கூகுள் தேடுதளம் மட்டுமே. ஆனால் அறிவியல் தகவல்கள் தேடுவதற்கு மட்டும் என ஓர் தளம், கூகுள் தேடல் தளத்தைக் காட்டிலும் முன்னணி இடம் பெற்று இயங்குகிறது.
இதன் பெயர் சைரஸ். இந்த தேடுதல் தளம் கொண்டுள்ள முகப்புப் பக்கத்தில் ஏறத்தாழ 41 கோடி தளங்கள் உள்ளன. தேடும் போது முக்கிய சொல், தலைப்பு அல்லது அறிவியல் கலைச் சொல் என ஏதேனும் ஒன்றைத் தரலாம். அந்த தலைப்பு அல்லது சொல் குறித்த தளங்கள் மட்டுமின்றி பல முக்கிய கட்டுரைகளையும் இந்த தளம் சுட்டிக் காட்டுகிறது.
இதனுடைய ஒரு சிறப்பம்சம் என்னவெனில் அறிவியல் அல்லாத மற்ற தளங்களை இந்த தேடல் தளமே ஒதுக்கிவிடுகிறது. எனவே தொடர்பு இல்லாத மற்ற தளங்களின் லிங்க் மீது கிளிக் செய்து அவற்றைத் தேவையின்றி இறக்கி நேரத்தை வீணடிக்கும் வேலை இங்கு எழாது. இந்த தளம் சுட்டிக் காட்டும் தளங்கள் அனைத்தும் அறிவியல் சார்ந்த, தொழில் நுட்பம் அல்லது மருத்துவம் சார்ந்த தகவல்கள் உள்ள தளங்களாக இருக்கும்.
அண்மைக் காலத்தில் அந்த அறிவியல் பிரிவில் வெளியான அறிக்கைகள், வல்லுநர்களின் கட்டுரைகள், காப்புரிமை பெற்ற தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வரும் ஆய்வு இதழ்கள் ஆகியவற்றைக் காட்டும் இணைய தளங்களுக்கான தொடர்புகளாக இருக்கும்.
ஆய்வு மேற்கொள்பவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கான தனிப்பட்ட தகவல்களைக் காட்டும் தளங்களாக இருக்கும். தொடர்ந்து பல ஆண்டுகளாக அறிவியல் தேடல்களுக்கான இணைய தளத்திற்கான விருதை இந்த தளம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தளத்தின் மூலம் குறிப்பிட்ட பொருள் குறித்த தேடல் மட்டுமின்றி கட்டுரை எழுதியோர், கட்டுரைத் தலைப்பு, அதனை வெளியிட்ட ஆய்வு இதழ் ஆகியவற்றின் அடிப்படையிலும் தேடலாம். நாட்கள் அடிப்படையிலும் தேடலை மேற்கொள்ளலாம்.
இணையதள முகவரி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

Follow Us